டெல்லியில் 3 அடுக்கு கட்டிடத்தில் இரவில் தீ விபத்து
டெல்லியில் 3 அடுக்கு கட்டிடத்தில் இரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள காந்தி நகர் பகுதியில் 3 அடுக்கு கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இதில் கடைகளும் அமைந்துள்ளன. கொரோனா வைரசால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, பின்னர் தளர்வு அமலில் உள்ளது. பண்டிகையையொட்டி வர்த்தகம் சூடு பிடித்திருந்தது.
வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். இந்நிலையில், இன்றிரவு அந்த கட்டிடத்தில் உள்ள கடையொன்றில் திடீரென தீப்பிடித்து உள்ளது.
இதுபற்றிய தகவல் அறிந்து தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்றன. 20 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளன. இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெளிவாக தெரியவரவில்லை.
எனினும் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. போலீசாரின் தீவிர விசாரணைக்கு பின்னரே இதுபற்றிய முழு விவரம் தெரிய வரும்.
Related Tags :
Next Story