கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி


கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி
x
தினத்தந்தி 13 Nov 2020 12:49 AM IST (Updated: 13 Nov 2020 12:49 AM IST)
t-max-icont-min-icon

மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளார்.

புதுடெல்லி,

மத்திய மகளிர் நலம் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி. இவருக்கு கடந்த மாதம் (அக்டோபர்) 28-ந்தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.

இந்த நிலையில் அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இதனை அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘எனக்கு கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனையின் முடிவில் தெரியவந்துள்ளது. நான் நலம் பெற வாழ்த்திய மற்றும் பிரார்த்தனை செய்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி’ என்று கூறியுள்ளார்.

Next Story