இந்தியா நடத்திய அதிரடி தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 8 பேர் பலி
காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 8 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியானார்கள்.
ஸ்ரீநகர்,
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதைப் பாகிஸ்தான் வாடிக்கையாகக் கொண்டுள்ளது. பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது. எனினும்,பாகிஸ்தான் திருந்தியபாடில்லை.
இந்த நிலையில், காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 8 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியானார்கள்.
பூஞ்ச், கெரன் உள்ளிட்ட இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் அத்மீறி தாக்குதல் நடத்தியதால் இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.
ஜம்மு காஷ்மீரின் இருவேறு பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். உரி எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்கியதில் பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story