தெலுங்கானாவில் பசுமை பட்டாசுகளை வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி


தெலுங்கானாவில் பசுமை பட்டாசுகளை வெடிக்க  உச்ச நீதிமன்றம் அனுமதி
x
தினத்தந்தி 13 Nov 2020 12:21 PM GMT (Updated: 13 Nov 2020 12:21 PM GMT)

தெலுங்கானாவில் பசுமைப் பட்டாசுகளை விற்பனைக்கும், வெடிப்பதற்கும் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

தீபாவளி பண்டிகையின் போது, பட்டாசுகள் விற்கவும்,வெடிக்கவும் தெலுங்கானா உயர்நீதிமன்றம் தடை விதித்தது. உயர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி மாநிலத்தில் பட்டாசுகள் வெடிக்க முழு தடையை அரசு விதித்தது. இந்த தடை உத்தரவுக்கு எதிராக, தெலுங்கானா பட்டாசு டீலர்கள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. 

இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த  உச்ச நீதிமன்றம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் 9-ம் தேதி உத்தரவு அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் எனவும் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி தெலங்கானாவில், பசுமை பட்டாசுகளை விற்பனை செய்யவும், 2 மணி நேரம் மட்டும் பட்டாசுகளை வெடிக்கவும் அனுமதி அளித்து, 

Next Story