ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள் நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை ; பிரதமர் மோடி புகழாஞ்சலி


ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள் நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை ; பிரதமர் மோடி புகழாஞ்சலி
x
தினத்தந்தி 14 Nov 2020 11:12 AM IST (Updated: 14 Nov 2020 11:12 AM IST)
t-max-icont-min-icon

ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளான இன்று அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.

புதுடெல்லி

பண்டிட் ஜவகர்லால் நேருவின் பிறந்த நாள், குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று நேருவின் 131-வதுபிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள சாந்தி வானாவில் உள்ள நேருவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.  நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மலர்களை தூவி மரியாதை செலுத்தினார். 

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் ஜவகர்லால் நேருவின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்’என கூறி உள்ளார்.

ராகுல் காந்தி வெளியிட்டு உள்ள டுவிட்டர் பதிவில் இன்று, தேசத்தின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்த நாளை இந்தியா கொண்டாடுகிறது. சகோதரத்துவம், சமத்தும், நவீன சிந்தனை ஆகியவற்றால் தேசத்துக்கு தொலைநோக்குடன் அடித்தளமிட்டவர். இந்த மதிப்பு மிகுந்த விஷயங்களை கண்டிப்பாகப் பாதுகாப்பதே எங்களின் முயற்சியாகும்”எனத் தெரிவித்தார்.


Next Story