காஷ்மீரில் இரு சக்கர வாகன ஷோரூமில் திடீர் தீ விபத்து
காஷ்மீரில் இரு சக்கர வாகன ஷோரூமில் இன்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் உதாம்பூர் மாவட்டத்தில் சிவ் நகர் பகுதியில் இரு சக்கர வாகன ஷோரூம் ஒன்று உள்ளது. இதில் திடீரென இன்றிரவு தீ விபத்து ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்து உடனடியாக தீயணைப்பு வாகனங்கள் சம்பவ பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதன்படி, 3 தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.
எனினும், தீ விபத்தில் ஷோரூமில் இருந்த பல இரு சக்கர வாகனங்கள் எரிந்து விட்டன. தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 3 தீயணைப்பு வீரர்களுக்கு பலத்த காயமேற்பட்டது. அவர்கள் அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர் என தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story