மணிப்பூர் முதல் மந்திரி பிரென் சிங் கொரோனா தொற்றால் பாதிப்பு


மணிப்பூர் முதல் மந்திரி பிரென் சிங் கொரோனா தொற்றால் பாதிப்பு
x
தினத்தந்தி 15 Nov 2020 9:17 AM GMT (Updated: 2020-11-15T14:47:33+05:30)

மணிப்பூர் முதல் மந்திரி பிரென் சிங் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இம்பால்,

கடந்த 10 மாதங்களாக இந்தியாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று, கடந்த சில வாரங்களாக சீராக குறைந்து வருகிறது. இருப்பினும், கொரோனா தொற்று சமூகத்தில் அனைத்து தரப்பினரையும் பதம் பார்த்து வருகிறது. அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என  உயர் அந்தஸ்து கொண்டவர்களும் கொரோனா தொற்றில் இருந்து தப்ப முடியவில்லை. 

அந்த வகையில், மணிப்பூர் மாநில முதல் மந்திரி பிரென் சிங் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் பிரென் சிங் பதிவிட்டு இருப்பதாவது: “எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீப காலங்களில் என்னை சந்தித்தவர்கள் தனிமைப்படுத்திக்கொள்வதோடு, பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என வலியுறுத்துகிறேன்” என்றார். 

Next Story