பழம்பெரும் வங்காள நடிகர் சவுமித்திர சட்டர்ஜி காலமானார்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வங்காள நடிகர் சவுமித்திர சட்டர்ஜி காலமானார்.
கொல்கத்தா,
வங்காள நடிகர் சவுமித்திர சட்டர்ஜி (வயது 85) கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டும் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைக்கவில்லை.
அத்துடன் நிமோனியா காய்ச்சல் பாதிப்பு, சிறுநீரகம் செயலிழப்பு, நரம்பியல் பாதிப்பு என அடுத்தடுத்த பாதிப்புகளால் அவரது உடல்நிலை கடந்த சில தினங்களாக கவலைக்கிடமாகவே இருந்தது. செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு, அவரை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி சவுமித்திர சட்டர்ஜி இன்று நண்பகல் காலமானார்.
Related Tags :
Next Story