காஷ்மீர் உள்ளாட்சி தேர்தல்; பா.ஜ.க. பொறுப்பாளராக அனுராக் தாக்குர் நியமனம்
ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தலுக்கான பா.ஜ.க. பொறுப்பாளராக அனுராக் தாக்குர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
புதுடெல்லி,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் வருகிற 28ந்தேதி முதல் டிசம்பர் 19ந்தேதி வரை மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 22ந்தேதி நடைபெறும்.
ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆக பிரிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, மக்கள் மாநாட்டு கட்சி மற்றும் சி.பி.ஐ. (எம்.) ஆகியவை முக்கிய கட்சிகளாக போட்டியிடுகின்றன.
இந்த தேர்தலை முன்னிட்டு உள்ளாட்சி தேர்தலுக்கான பா.ஜ.க. பொறுப்பாளராக அனுராக் தாக்குர் நியமிக்கப்பட்டு உள்ளார். தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடும் என்றும் காஷ்மீரில் வலுகட்டாயத்துடன் சட்டங்களை அமல்படுத்தி வருபவர்களை தோற்கடிக்க முயற்சிப்போம் என்றும் காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் குலாம் அகமது மிர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story