பனிப்பொழிவில் சிக்கிய பொதுமக்கள்: பனியை பொருட்படுத்தாமல் இரவில் 5 மணி நேரம் நடந்து சென்று மீட்ட ராணுவம்!
ஜம்மு காஷ்மீரில் பனிப்பொழிவில் சிக்கிய பொதுமக்களை கடும்பனியையும் பொருட்படுத்தாமல் இரவில் 5 மணி நேரம் நடந்து சென்று ராணுவம் அவர்களை பத்திரமாக மீட்டது.
புதுடெல்லி,
ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளில் கடுமையாக பனி பொழிந்து வருகிறது. என்.எச் -244 இல் சிந்தான் பாஸ் அருகே ஒரு இடத்தில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட பொதுமக்கள் 10பேர் சிக்கியிருப்பதாக ராணுவத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த இராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினர் அடங்கிய குழு கடும் பணியை பொருட்படுத்தாமல் சுமார் 5 மணி நேரம் இரவில் நடந்து சென்று அவர்களை பத்திரமாக மீட்கப்பட்டு சிந்தான் மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டு அனைவருக்கும் உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்பட்டது.
குல்மார்க் மற்றும் பஹல்காம் போன்ற மலைவாசஸ்தலங்கள் உட்பட காஷ்மீர் பள்ளத்தாக்கின் மேல் பகுதிகள் அதிக பனிப்பொழிவைப் சந்திக்கின்றன. வானிலை தொடர்ந்து மோசமாக இருப்பதால், காஷ்மீர் பள்ளத்தாக்கில் பனிச்சரிவு எச்சரிக்கைகளை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
Related Tags :
Next Story