மேற்கு வங்காளத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,714 ஆக அதிகரிப்பு


மேற்கு வங்காளத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,714 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 16 Nov 2020 10:23 PM IST (Updated: 16 Nov 2020 10:23 PM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 3,012 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொல்கத்தா,

மேற்குவங்க மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3,012 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,34,563 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் இன்று மேலும் 53 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 7,714 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 27,897 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று அதிகபட்சமாக 4,376 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளநிலையில், இதுவரை 3,98,952 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story