தீபாவளி பட்டாசு வெடித்ததில் காயம்; பா.ஜ.க. எம்.பி.யின் பேத்தி உயிரிழப்பு
பா.ஜ.க. எம்.பி. ரீட்டா பகுகுணாவின் 8 வயது பேத்தி தீபாவளி பட்டாசு வெடித்ததில் காயம் ஏற்பட்டு உயிரிழந்து உள்ளார்.
பிரயாக்ராஜ்,
பா.ஜ.க. எம்.பி. ரீட்டா பகுகுணாவின் 8 வயது பேத்தி தீபாவளி பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட காயத்தில் உயிரிழந்து உள்ளார்.
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் தொகுதியின் எம்.பி.யாக இருந்து வருபவர் ரீட்டா பகுகுணா. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இவரது 8 வயது பேத்தி பட்டாசு வெடித்துள்ளார்.
இதில் ஜோஷியின் பேத்திக்கு பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். எனினும் இதில் பலனின்றி அவர் உயிரிழந்து உள்ளார்.
உத்தர பிரதேச முன்னாள் முதல் மந்திரி ஹேமாவதி நந்தன் பகுகுணாவின் மகள் ரீட்டா பகுகுணா ஆவார். கடந்த 2016ம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்த அவர் அதன்பின்னர் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பிரயாக்ராஜ் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.யானார்.
அவர் பா.ஜ.க.வில் சேருவதற்கு முன் கடந்த 2007ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு உத்தர பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்துள்ளார்.
Related Tags :
Next Story