கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கை: உத்தரபிரதேசத்துக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு


கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கை: உத்தரபிரதேசத்துக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு
x
தினத்தந்தி 18 Nov 2020 12:58 AM GMT (Updated: 2020-11-18T06:28:26+05:30)

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை உத்தரபிரதேச அரசு சிறப்பாக செயல்படுத்தி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு பாராட்டுதெரிவித்துள்ளது.

லக்னோ, 

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை உத்தரபிரதேச அரசு சிறப்பாக செயல்படுத்தி இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் இந்திய பிரதிநிதி ரோடரிகோ ஆப்ரின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:-

கொரோனா பாதித்தவர்களின் தொடர்புகளை அடையாளம் காண்பதில் உத்தரபிரதேச அரசின் செயல்பாடு பாராட்டுக்கு உரியது. 70 ஆயிரம் முன்கள பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய செயல்பாடுகள், மற்ற மாநிலங்கள் பின்பற்றும் அளவுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story