ரூ.10 கோடி அபராத தொகையை இன்று செலுத்துகிறார் சசிகலா
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவின் தண்டனை காலம் விரைவில் நிறைவடைகிறது
பெங்களூரு,
சொத்துக் குவிப்பு வழக்கில் கைதான சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார்.
2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ஆம் தேதி விடுதலையாக வாய்ப்புள்ளதாகவும் சசிகலா செலுத்தவேண்டிய அபராதத் தொகை 10 கோடி ரூபாயை செலுத்தாத பட்சத்தில் மேலும் ஓராண்டு சிறைவாசம் நீட்டிக்கப்பட்டு 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ம் தேதி வரை அனுபவிக்க வேண்டும். அதன் பின்னர் விடுதலை செய்யப்படுவார் என கர்நாடக சிறைத் துறையின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே சசிகலா சிறைக் கைதிகளுக்கான நன்னடத்தை மற்றும் விடுமுறை காலம் உள்ளிட்ட சலுகைகளை பெற்று முன்கூட்டியே விடுதலை ஆவதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதனால் அவர் விரைவில் வெளியே வர வாய்ப்பு உள்ளதாகவும் அவரது தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரூ.10 கோடி அபராத தொகையை சசிகலா இன்று செலுத்துகிறார். பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் அபராத தொகையை செலுத்த சசிகலா வழக்கறிஞர்கள் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தன்னுடைய அபாராதத் தொகையை சசிகலா நீதிமன்றத்தில் செலுத்தி உள்ளதாகவும் அபராத தொகை செலுத்த 2 வங்கிகளில் வரைவோலை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
அபராதத் தொகைக்கான வரைவோலை நீதிமன்ற பதிவாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவின் தண்டனை காலம் விரைவில் நிறைவடைகிறது.
Related Tags :
Next Story