ஜம்மு காஷ்மீரில் கையெறி குண்டு வீச்சு: 12 பேர் காயம்


ஜம்மு காஷ்மீரில் கையெறி குண்டு வீச்சு: 12 பேர் காயம்
x
தினத்தந்தி 18 Nov 2020 2:31 PM GMT (Updated: 2020-11-18T20:01:52+05:30)

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியதில் 12 பேர் காயம் அடைந்தனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் புல்வமா மாவட்டத்தில் உள்ள கக்போரா பகுதியில் காவல்துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினர் இன்று  ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள்  பாதுகாப்பு படையினரை குறிவைத்து   கையெறி குண்டுகளை வீசினர். 

இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் 12 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சம்பவ இடத்தில் பாதுகாப்பிற்காக கூடுதல் படைகள் தற்போது குவிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு படையினர் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 


Next Story