கிழக்கு லடாக்கில் குளிரை சமாளிக்கும் வகையில் படை வீரர்களுக்கு நவீன குடியிருப்பு வசதிகள்


கிழக்கு லடாக்கில் குளிரை சமாளிக்கும் வகையில் படை வீரர்களுக்கு நவீன குடியிருப்பு வசதிகள்
x
தினத்தந்தி 18 Nov 2020 11:46 PM GMT (Updated: 18 Nov 2020 11:46 PM GMT)

கிழக்கு லடாக்கில் குளிரை சமாளிக்கும் வகையில் படை வீரர்களுக்கு நவீன குடியிருப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

லே, 

கிழக்கு லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய, சீன படைகள் குவிப்பால் போர் பதற்றம் தொடர்கிறது. இந்த நிலையில் அங்கு பணியமர்த்தப்பட்டுள்ள படை வீரர்கள், கடுமையான குளிர்காலத்தில் எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ளும் தயார் நிலையில் இருக்க வேண்டிய தேவை உள்ளது. இதற்காக அனைத்து படை வீரர்களுக்கும் நவீன குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தும் பணி நிறைவு அடைந்துள்ளது.

இதன்படி பல ஆண்டுகளாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வசதிகளுடன் கூடிய நவீன முகாம்களைத் தவிர மின்சாரம், தண்ணீர், வெப்ப வசதிகள், சுகாதாரம் ஆகியவற்றுக்கான ஒருங்கிணைந்த ஏற்பாடுகளுடன் கூடிய அதிநவீன வாழ்விடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எந்தவொரு அவசர தேவையையும் பூர்த்தி செய்ய தேவையான சிவில் உள்கட்டமைப்புகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

குளிர்காலத்தில் நிறுத்தப்பட்டுள்ள படைவீரர்களின் செயல்பாட்டு திறனை உறுதி செய்வதற்காக இந்த துறையில் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து படை வீரர்களுக்கும் வாழ்விட வசதிகளை நிறுவுவதை இந்திய ராணுவம் செய்து முடித்துள்ளது என்று இந்திய ராணுவம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story