மராட்டிய மாநிலத்தில் இன்று 5,535 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


மராட்டிய மாநிலத்தில் இன்று 5,535 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 19 Nov 2020 2:59 PM GMT (Updated: 19 Nov 2020 2:59 PM GMT)

மராட்டிய மாநிலத்தில் இன்று 5,535 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று 5,535 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,63,055 ஆக அதிகரித்துள்ளது.

மராட்டிய மாநிலத்தில் இன்று 154 பேர் கொரொனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 46,356 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் இதுவரை 16,35,971 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தற்போது மருத்துவமனைகளில் 79,738 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக ஆந்திர மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story