பீகார் கல்வி அமைச்சர் மேவாலால் சவுத்ரி திடீர் ராஜினாமா


பீகார் கல்வி அமைச்சர் மேவாலால் சவுத்ரி திடீர் ராஜினாமா
x
தினத்தந்தி 19 Nov 2020 4:19 PM GMT (Updated: 19 Nov 2020 4:19 PM GMT)

பீகார் கல்வி அமைச்சர் மேவாலால் சவுத்ரி திடீரென பதவியை ராஜினாமா செய்ததால், புதிய குழப்பம் உருவாகியுள்ளது.

பாட்னா,

பீகார் மாநிலத்தில் கடந்த 16 ஆம் தேதி பதவியேற்ற நிதிஷ்குமார் தலைமையிலான அரசில், கல்வி அமைச்சராக மேவாலால் சவுத்திரி பொறுப்பேற்றார். இந்நிலையில் மேவாலால் சவுத்திரி முன்பு விவசாய பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. 

மேவாலால் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டினார். இதனையடுத்து இன்று மேவாலால் சவுத்திரி, கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

இவரது ராஜினாமா பீகார் அரசியலில் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் தேசிய கீதம் பாடத் தெரியாமல் மேவாலால் சவுத்ரி சர்ச்சையில் சிக்கியதும் குறிப்பிடத்தக்கது. 

Next Story