தேசிய செய்திகள்

சி.பி.எஸ்.இ. 10, 12 ஆம் வகுப்புகளுக்கு நடப்பு கல்வி ஆண்டில் தேர்வு நிச்சயம் நடைபெறும் என தகவல் + "||" + Examination for CBSE 10th and 12th classes will be held in the current academic year

சி.பி.எஸ்.இ. 10, 12 ஆம் வகுப்புகளுக்கு நடப்பு கல்வி ஆண்டில் தேர்வு நிச்சயம் நடைபெறும் என தகவல்

சி.பி.எஸ்.இ. 10, 12 ஆம் வகுப்புகளுக்கு நடப்பு கல்வி ஆண்டில் தேர்வு நிச்சயம் நடைபெறும் என தகவல்
நடப்பு கல்வி ஆண்டில் சி.பி.எஸ்.இ. 10, 12 ஆம் வகுப்புகளுக்கு தேர்வு உண்டு என சி.பி.எஸ்.இ. அமைப்பு நிர்வாகிகள் குழுவின் செயலாளர் அனுராக் திரிபாதி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் எதுவும் இதுவரை திறக்கப்படாத நிலையில், வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வழக்கமாக நடைபெறும் சி.பி.எஸ்.சி. தேர்வுகள் இந்த ஆண்டு நடைபெறுமா? என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே நிலவு வந்தது.

இதற்கு விளக்கமளிக்கும் விதமாக சி.பி.எஸ்.இ. அமைப்பு நிர்வாகிகள் குழுவின் செயலாளர் அனுராக் திரிபாதி இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது நடப்பு கல்வி ஆண்டிற்கான சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நிச்சயமாக நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.

மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருவதால் தேர்வு கட்டாயமாக நடைபெறும் என்று கூறிய அவர், தேர்வுக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சி.பி.எஸ்.இ. 10, 12ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
சி.பி.எஸ்.இ. 10, 12ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.