டெல்லியில் பொது இடங்களில் குட்கா, பான் மசாலா போன்றவை உட்கொண்டால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
புதுடெல்லி,
டெல்லியில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதேபோன்று காற்று மாசு
அளவும் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில், டெல்லி லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜால் கொரோனா வைரசுக்கான ஒழுங்குமுறை 2020க்கான டெல்லி தொற்று நோய் மேலாண் திருத்தத்தினை இன்று கொண்டு வந்துள்ளார்.
இதன்படி, தனிமைப்படுத்துதல், சமூக இடைவெளி உள்ளிட்ட விதிகளை மீறுவோர், பொது இடங்களில் முக கவசங்களை அணியாமல் இருப்போர், பான்மசாலா, குட்கா ஆகியவற்றை உட்கொள்வோர் மீது அரசு அங்கீகாரம் பெற்ற நபர்கள் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்க அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது.
அரசு பொது இடங்களில் அனுதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் சிலை கட்டுமானங்களை, வருவாய்த்துறை அகற்ற வேண்டும் என்று, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் பல்வேறு தளர்வுகளுடன் இயங்கும் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள், அலுவலகங்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்களில் பின்பற்ற வேண்டிய கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை அவ்வப்போது அரசு அறிவித்து வருகிறது.
உத்தரவை மீறி முடி திருத்தம் செய்ததால் சலூன் கடைக்காரரை குடும்பத்துடன் ஊரைவிட்டு ஒதுக்கிவைத்ததுடன், அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி அவர் தாசில்தாரிடம் புகார் செய்துள்ளார்.