கர்நாடகாவில் ஆவணங்களின்றி கொண்டு சென்ற 6 கிலோ தங்க நகைகள் பறிமுதல்


கர்நாடகாவில் ஆவணங்களின்றி கொண்டு சென்ற 6 கிலோ தங்க நகைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 21 Nov 2020 11:20 AM GMT (Updated: 21 Nov 2020 11:20 AM GMT)

கர்நாடகாவில் ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற 6 கிலோ தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

பெங்களூரு,

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் போலீசார் நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.  அந்த வழியே வந்த வாகனம் ஒன்றை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சோதனையிட்டனர்.  இதில் வாகனத்தில் 6 கிலோ எடை கொண்ட தங்க நகைகள் இருந்துள்ளன.

ஆனால் அவற்றிற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை.  இதனால் போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர்.  வழக்கு பதிவும் செய்யப்பட்டது.  இந்த சம்பவம் பற்றி வருமான வரி துறைக்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டெல்லி ரெயில் நிலையத்தில் மும்பையை சேர்ந்த பிரவீன் குமார் என்பவரிடம் இருந்து வளைகுடா நாட்டு குறியீடுகளை கொண்ட 6.292 கிலோ எடை கொண்ட தங்கம் நேற்று பறிமுதல் செய்யப்பட்டது.  இதன் மதிப்பு ரூ.3.25 கோடி இருக்கும்.

சமீப காலங்களாக தங்க கடத்தலில் ஈடுபடும் கடத்தல்காரர்கள் நூதன முறையில் செயல்படுகின்றனர்.  பெருமளவில் விமானத்தில் வரும் பயணிகளிடம் இருந்தே இதுவரை தங்கம் பிடிபட்டு வந்தது.  ஆனால், விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் விசாரணையில் இருந்து தப்ப பிரவீன் ரெயிலை தேர்வு செய்துள்ளார்.

இதேபோன்று மெட்டல் டிடெக்டர் சோதனையில் சிக்காமல் இருக்க ஹவுரா ரெயில் நிலையத்திற்கு செல்லாமல் தவிர்த்து உள்ளார்.  கடத்தல் தங்கம் அண்டை நாடுகளில் இருந்து கடல் வழியாகவும் படகில் வைத்து கடத்தப்படுகிறது.

Next Story