தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் பலி + "||" + 5dead, five hospitalised after consuming illicit liquor in UP’s Prayagraj

உத்தரபிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் பலி

உத்தரபிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் பலி
கடந்த தீபாவளி பண்டிகையின்போது, உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் 6 பேரும், ஹாபூரில் 7 பேரும் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தனர்.
பிரயாக்ராஜ், 

கடந்த தீபாவளி பண்டிகையின்போது, உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் 6 பேரும், ஹாபூரில் 7 பேரும் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தனர்.

இந்த சோகம் இன்னும் தொடர்கிறது. அம்மாநிலத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தின் அமாலியா கிராமத்தில் நேற்றுமுன்தினம் கள்ளச்சாராயம் அருந்திய 5 பேர் பலியானார்கள். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும், அரசு மதுபானக் கடை ஒன்றில் கள்ளச்சாராயத்தை வாங்கியுள்ளனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு விரைந்த அரசு அதிகாரிகள், அந்தக் கடைக்கு சீல் வைத்தனர். கடையை நடத்தி வந்தவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.