மாற்று கட்சியாக உருவெடுக்க உள்கட்சி தேர்தலை நடத்துங்கள்: காங். மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் + "||" + Congress should hold polls if it wants to become a national alternative, says Ghulam Nabi Azad
மாற்று கட்சியாக உருவெடுக்க உள்கட்சி தேர்தலை நடத்துங்கள்: காங். மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்
5 நட்சத்திர கலாசாரத்தை ஒழிக்கும் வரையில், நம்மால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: எங்கள் (காங்கிரஸ்) கட்சியின் கட்டமைப்பு சிதைந்துவிட்டது. கட்சியை மறுகட்டமைப்பு செய்ய வேண்டியுள்ளது.
அதன்பின் அந்த கட்டமைப்பு மூலம் ஏதேனும் ஒரு தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அது சரியாக வேலை செய்யும். ஆனால், தலைவரை மாற்றுவதால் பீகார், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசத்தில் நாங்கள் வெற்றிபெற்றுவிடுவோம் என்றால் அது தவறு. கட்டமைப்பை மாற்றுவதன் மூலமே அது நடைபெறும்.
எங்களின் பெரும்பாலான கோரிக்கைகளை, தலைமை ஏற்று கொண்டது. தேசிய அளவில் மாற்றாக இருக்கவும், கட்சிக்கு புத்துயிர் அளிக்கவும் உள்கட்சி தேர்தலை நடத்த வேண்டும்”என்றார்.
வேளாண் சட்டங்களை 18 மாதங்கள் நிறுத்தி வைக்கிறோம் எனும் மத்திய அரசின் லாலிபாப் மிட்டாயை விவசாயிகள் புறக்கணித்து விட்டார்கள். இதன் மூலம் விவசாயிகள் விழித்து கொண்டார்கள் என்று காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு விமர்சனம் காரணமாக, விவசாயிகளிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும், அவர் மீது சுப்ரீம் கோர்ட்டு வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.