தேசிய செய்திகள்

பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் வீர மரணம் + "||" + As India mourns 26/11 attack, terror attack on outskirts of Srinagar; 2 jawans martyred

பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் வீர மரணம்

பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் வீர மரணம்
பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் வீர மரணம் அடைந்தனர்.
ஸ்ரீநகர்

ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகர் அருகே  பரிம்போரா என்ற இடத்தில் பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி காரில் இருந்த 3 பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் படுகாயமடைந்த 2 வீரர்கள் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்தனர்

மக்கள் கூட்டமாக இருந்ததால் பயங்கரவாதிகள் மீது உடனடியாக பாதுகாப்பு படை வீரர்களால் பதிலடி தாக்குதல் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து தாக்குதல் நடந்த பகுதியை சீல் வைத்து, பயங்கரவாதிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும் போது காயமடைந்த வீரர்கள் அருகிலுள்ள மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
நெரிசலான பகுதியாக இருப்பதால், பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க நமது படைகள் கட்டுப்பாட்டை கடைபிடித்தனர் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்
ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
2. ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவு கோளில் 5.1 ஆக பதிவு
ஜம்மு காஷ்மீரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 5.1 ஆக பதிவாகியுள்ளது.
3. ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவு கோளில் 3.5 ஆக பதிவு
ஜம்மு காஷ்மீரில் இன்று காலை 10.58 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகியுள்ளது.
4. காஷ்மீர் : புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் கையெறி குண்டு தாக்குதல் - பொதுமக்கள் 7 பேர் காயம்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
5. ஜம்மு காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் புத்தாண்டு கொண்டாட்டம்
ஜம்மு காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் புத்தாண்டை கொண்டாடினர்.