மேற்குவங்காள அரசியலில் பரபரப்பு: மம்தா பானர்ஜிக்கு எதிர்ப்பு, மூத்த அமைச்சர் திடீர் ராஜினாமா!


மேற்குவங்காள அரசியலில் பரபரப்பு: மம்தா பானர்ஜிக்கு எதிர்ப்பு, மூத்த அமைச்சர் திடீர் ராஜினாமா!
x
தினத்தந்தி 27 Nov 2020 11:29 AM GMT (Updated: 27 Nov 2020 11:29 AM GMT)

மேற்கு வங்காள அரசியலில் பரபரப்பு மம்தா பானர்ஜிக்கு எதிர்ப்பு தெரிவித்து மூத்த அமைச்சர் சுவேந்து அதிகாரி திடீர் ராஜினாமா செய்து உள்ளார்.

கொல்கத்தா

மேற்குவங்கத்தில் அதிருப்தி திரிணாமுல் காங்கிரஸ் மூத்த அமைச்சர் சுவேந்து அதிகாரி  தந்து போக்குவரத்து துறை அமைச்சர் பதவியில் இருந்து திடீரென ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை ம்மதா பானர்ஜிக்கு அனுப்பினார் மற்றும் ஒரு நகலை கவர்னர் ஜகதீப் தங்கருக்கு இரவு 1.05 மணிக்கு மின்னஞ்சலில் அனுப்பி உள்ளார்.

இவர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிசேக் பானர்ஜிக்கு கட்சியில்  கொடுக்கப்படும் முக்கியத்துவத்தாலும், தேர்தல் திட்ட வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் தலையீட்டாலும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இன்னும் 6 மாதத்தில் மேற்குவங்க சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அமைச்சரின் ராஜினாமா முக்கியத்துவம் பெறுகிறது.


Next Story