வியட்நாமின் ஆயுதப் படைகளை நவீனமயமாக்க இந்தியா உதவி அளிக்க உறுதி


வியட்நாமின் ஆயுதப் படைகளை நவீனமயமாக்க இந்தியா உதவி அளிக்க உறுதி
x
தினத்தந்தி 28 Nov 2020 11:46 AM GMT (Updated: 28 Nov 2020 11:46 AM GMT)

வியட்நாமின் ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதில் இந்தியா உதவி வழங்குவதை உறுதிப்படுத்தி உள்ளது.

புதுடெல்லி

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வியட்நாம் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் என்கோ ஜுவான் லிச்சுடன் நேற்று  வீடியோ கான்பரன்சிங் மூலம் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சு வார்த்தை அடிப்படையில் இந்தியா- வியட்நாம் இரு தரப்பினரும் வெளியிட்ட ஒரு புதிய கூட்டு அறிக்கையில் இந்தியா  வியட்நாமின்  ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதற்கு உதவி அளிப்பதாக இந்தியா உறுதியளித்துள்ளது.

2016 ஆம் ஆண்டில் இரு நாடுகளும் தொடங்கிய விரிவான மூலோபாய கூட்டுறவின் மிக முக்கியமான அம்சங்களில் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒன்றாகும் என்று ராஜ்நாத்சிங் வியட்நாம் பாதுகாப்பு அமைச்சரிடம் கூறி உள்ளார்.

பிரம்மோஸைத் தவிர இந்தியாவின் ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் துருவ் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட பல இராணுவ உபகரணங்களை வாங்குவதில் வியட்நாம் ஆர்வமாக உள்ளது.

பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, இந்தியாவும் வியட்நாமும் தங்கள்  விமானப்படைகளால் விமானிகளுக்கு கூட்டுப் பயிற்சி அளிப்பதற்கும் ஐ.நா அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட வேண்டிய படைகளுக்கு பயிற்சி அளிப்பதற்கும் ஒப்புதல் தெரிவித்து உள்ளன.

வியட்நாமில்  டிசம்பர் 10 ஆம் தேதி  நடைபெறும் ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்திற்கு (ஏடிஎம்எம்)   வியட்நாம் பாதுகாப்பு அமைச்சர்  இந்திய பாதுகாப்பு அமைச்சரை, அழைத்து உள்ளார்.

Next Story