காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் முதற்கட்ட தேர்தல்; 51.76% வாக்குகள் பதிவு


காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் முதற்கட்ட தேர்தல்; 51.76% வாக்குகள் பதிவு
x
தினத்தந்தி 28 Nov 2020 5:33 PM GMT (Updated: 28 Nov 2020 5:33 PM GMT)

காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சிலின் முதற்கட்ட தேர்தலில் 51.76% வாக்குகள் பதிவாகி உள்ளது.

ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று நடைபெற்றது. ஜம்மு மற்றும் காஷ்மீரில் இன்று முதல் வருகிற டிசம்பர் 19ந்தேதி வரை மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 22ந் தேதி நடைபெறும்.

ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆக பிரிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில், பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் போட்டியிடுகின்றன. இதேபோன்று தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, மக்கள் மாநாட்டு கட்சி மற்றும் சி.பி.ஐ. (எம்.) ஆகியவை முக்கிய கட்சிகளாக போட்டியிடுகின்றன.

இதில் காஷ்மீரில் 25 மற்றும் ஜம்முவில் 18 என மொத்தம் 43 தொகுதிகளுக்கு இன்று காலை முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது. 

இந்நிலையில் இன்று நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில் மொத்தம் 51.76 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளது. அதில் ஜம்மு பிரிவில் 64.2 சதவிகித வாக்குகளும், காஷ்மீர் பிரிவில் 40.65 சதவிகித வாக்குகளும் பதிவாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story