பெற்றோரின் அலட்சியத்தால் லிஃப்ட்டில் பறிபோனது சிறுவனின் உயிர்


பெற்றோரின் அலட்சியத்தால் லிஃப்ட்டில் பறிபோனது சிறுவனின் உயிர்
x
தினத்தந்தி 29 Nov 2020 1:54 PM GMT (Updated: 29 Nov 2020 1:54 PM GMT)

பெற்றோரின் அலட்சியத்தால் லிஃப்டில் இரு கேட்டுகளுக்கு நடுவே சிறுவன் ஒருவன் சிக்கி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பை அருகே தாராவி சாகு நகரை சேர்ந்தவர் சர்பராஸ். இவர தையல்காரராக உள்ளார். இவருக்கு 2 மகள்களும், ஹோஜபா சாயிக் (வயது 5) என்ற மகனும் இருந்தனர்.

இந்நிலையில் 4-வது தளத்தில் இருக்கும் தனது வீட்டிற்கு செல்ல தரை தளத்தில் இருந்து 3 குழந்தைகளும் அங்கு இருந்த கிரில் லிஃப்டை நேற்று மதியம் 12.43 மணி அளவில் சென்றுள்ளனர். 4- தளம் வந்தவுடன் சிறுமி மற்றொரு சிறுமியும் லிஃப்டிற்குள் இருந்து வெளியேறினர். சிறுமி சாயிக் வருவதற்குள் கதவை சாத்தி உள்ளார். 

சாயிக் லிஃப்பிடின் இரு கதவுகளுக்கு இடையே நின்றுகொண்டிருந்தார். இதனையடுத்து லிப்டிற்கு வெளியே இருந்த சிறுமியும் கிரில் கதவை சாத்தி உள்ளார்.

இதனையடுத்து லிஃப்ட் தரைதளத்திற்கு நகர்ந்தது. அப்போது இடையில் சிக்கிய சிறுவன் படுகாயமடைந்தார். இது குறித்து தகவலறிந்த சிறுவனின் தந்தை சர்பராஸ் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துக்கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

இது குறித்து தகவலறிந்த போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விபத்து என வழக்கு பதிவு செய்தனர். பெற்றோர் கவனம் இல்லாமல் சிறுவர்கள் லிப்ட்டை இயக்கும் அளவிற்கு அலட்சியமாக இருந்ததால் ஒரு சிறுவனின் உயிரி பறிபோயுள்ளது அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story