தேசிய செய்திகள்

போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் மத்திய அரசு உடனே பேசவேண்டும்; கெஜ்ரிவால் வலியுறுத்தல் + "||" + Centre Should Hold Talks With Farmers Unconditionally: Arvind Kejriwal

போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் மத்திய அரசு உடனே பேசவேண்டும்; கெஜ்ரிவால் வலியுறுத்தல்

போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் மத்திய அரசு உடனே பேசவேண்டும்; கெஜ்ரிவால் வலியுறுத்தல்
போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் மத்திய அரசு உடனே பேசவேண்டும் என்று கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.
புதுடெல்லி, 

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள்  தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் மத்திய அரசு உடனடியாக நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே,  செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி மூத்த தலைவர் சவுரப் பரத்வாஜ், டெல்லி எல்லையில் லட்சக்கணக்கான விவசாயிகள் பேச்சுவார்த்தைக்காக காத்துக் கொண்டிருக்கும்போது, உள்துறை மந்திரி அமித்ஷா ஐதராபாத் மாநகராட்சி தேர்தலுக்காக பிரசாரத்துக்கு சென்றிருப்பது மிகவும் பொறுப்பற்ற செயல் என்றார்.

ஒருபுறம், விவசாயிகளின் போராட்டத்தால் கொரோனா தொற்று பரவக்கூடும் என்று கூறும் அமித்ஷா, மறுபுறம் ஐதராபாத்தில் எந்த சமூக இடைவெளியும் இன்றி மாபெரும் தேர்தல் ஊர்வலத்தை நடத்துகிறார். விவசாயிகளை மறந்துவிட்டு, ஐதராபாத்தில் தண்ணீர் தேங்குவது, சாலைப் பள்ளங்கள் போன்றவற்றை அமித்ஷா பேசிக்கொண்டிருக்கிறார் என்றார் சவுரப் பரத்வாஜ்.

தொடர்புடைய செய்திகள்

1. வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தர்ணா போராட்டம்
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி திருவாரூரில் தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.
2. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை எரித்து பா.ஜ.க.வினர் சாலை மறியல் போலீசாருடன் தள்ளுமுள்ளு
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை எரித்து பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டதை தடுத்த போலீசாருடன் தள்ளுமுள்ளு செய்தனர்.
3. மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மாட்டுங்காவில் பா.ஜனதாவினர் போராட்டம்
மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மாட்டுங்காவில் பா.ஜனதாவினர் போராட்டம் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.
4. 43-வது நாளாக மாணவர்கள் போராட்டம் எதிரொலி: சிதம்பரம் மருத்துவக்கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை
43-வது நாளாக நேற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிதம்பரம் மருத்துவக்கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டது. விடுதியில் இருந்து உடனடியாக வெளியேறுமாறும் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வருமா? - நாளை மீண்டும் பேச்சுவார்த்தை
3 வேளாண் சட்டங்களையும் நிறுத்தி வைக்க மத்திய அரசு முன் வந்துள்ளது. இதனால் விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.