தேசிய செய்திகள்

இந்தியாவில் 94 லட்சம் கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை + "||" + The number of corona infections in India last 94 lakh

இந்தியாவில் 94 லட்சம் கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

இந்தியாவில் 94 லட்சம் கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 38 ஆயிரத்து 772 பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.
புதுடெல்லி,

கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்காவுக்கு அடுத்த  இடத்தில் உள்ள இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 38 ஆயிரத்து 772 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.  இது நேற்றைய எண்ணிக்கையை காட்டிலும் (41,810) சற்று குறைவாகும்.

இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94 லட்சம் கடந்துள்ளது.  இதுவரை நாட்டில் 94 லட்சத்து 31 ஆயிரத்து 692 பேருக்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.  இதேபோன்று கடந்த 24 மணிநேரத்தில் 443 பேர் கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்து உள்ளனர்.  நேற்று இந்த எண்ணிக்கை 496 ஆக இருந்தது.  இது நேற்று முன்தினம் 485 ஆகவும், அதற்கு முந்தின தினம் 492 ஆகவும் இருந்தது.  கடந்த 3 நாட்களுடன் ஒப்பிடும்பொழுது உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்து உள்ளது.

இதனால் இந்தியாவில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை நேற்றைய எண்ணிக்கையான 1 லட்சத்து 36 ஆயிரத்து 696ல் இருந்து 1 லட்சத்து 37 ஆயிரத்து 139 ஆக இன்று உயர்ந்து உள்ளது.  இதேபோன்று, சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 53 ஆயிரத்து 956ல் இருந்து 4 லட்சத்து 46 ஆயிரத்து 952 ஆக குறைந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 45 ஆயிரத்து 333 பேர் சிகிச்சை பெற்று தொற்றில் இருந்து குணமடைந்து சென்றுள்ளனர்.  இதனால், சிகிச்சை பெற்று குணமடைந்து சென்றவர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் இதுவரை 88 லட்சத்து 47 ஆயிரத்து 600 ஆக உயர்ந்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது
உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது
2. சசிகலா வரும் 27ஆம் தேதி விடுதலையாவது உறுதி - கர்நாடகா சிறைத்துறை தகவல்
சசிகலா வரும் 27ஆம் தேதி உறுதியாக விடுதலை செய்யப்படுவார் என்று கர்நாடகா சிறைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
3. உலக அளவில் 10 கோடியை நெருங்கும் கொரோனா பாதிப்பு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 கோடியை நெருங்கியுள்ளது.
4. கொரோனா பாதிப்பு: 6 ஜேம்ஸ் பாண்ட் படங்களில் ஸ்டண்ட்மேனாக பணியாற்றிய நடிகர் உயிரிழப்பு
6 ஜேம்ஸ் பாண்ட் படங்களில் ஸ்டண்ட்மேனாக பணியாற்றிய பழம்பெரும் நடிகர் ரெமி ஜூலியன் கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்து உள்ளார்.
5. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து விட்டேன் - சானியா மிர்சா
கொரோனா பாதிப்பில் இருந்து தான் குணமடைந்து விட்டதாக, இந்திய முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.