ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தொடர் அத்துமீறி தாக்குதல்: இந்திய ராணுவம் பதிலடி


ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தொடர் அத்துமீறி தாக்குதல்: இந்திய ராணுவம் பதிலடி
x
தினத்தந்தி 30 Nov 2020 12:25 PM GMT (Updated: 30 Nov 2020 12:25 PM GMT)

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

ஜம்மு,

ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் கட்டுப்பாட்டுபகுதியில் ஒரு ‘பாகிஸ்தான் ஜெட்’ சந்தேகத்திற்கு இடமின்றி செல்வதை பாதுகாப்புப் படைகள் கவனித்தாகவும், இது எந்த வகையான ஜெட் என்பதை சரியாக கண்டறிய முயற்சிகள் நடந்து வருகின்றன என்றும்,  பூஞ்ச் பகுதி முழுவதும் பாதுகாப்பை உஷார் படுத்த எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கர்னல் தேவேந்தர் ஆனந்த் கூறியதாவது:-

ஜம்மு-காஷ்மீரின்  பூஞ்ச் மாவட்டத்தில் இன்று பிற்பகல் 3.10 மணியளவில் போர்நிறுத்த விதிகளை மீறி பாகிஸ்தான் வீரர்கள் சிறிய ரக துப்பாக்கிகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது என தெரிவித்தார்.

இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் போர் நிறுத்த விதிமுறைகளை மீறி நடத்தப்பட்ட 3,200க்கும் மேற்பட்ட தாக்குதல்களில், 30 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 120 பேர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story