தேசிய செய்திகள்

பயங்கரவாதிகள் பயன்படுத்திய சுரங்கப்பாதையை கண்டுபிடிக்க பாகிஸ்தானுக்குள் 200 மீட்டர் தூரம் சென்ற இந்திய பாதுகாப்பு படையினர் + "||" + Indian security forces went 200 meters inside Pakistan to unearth tunnel used by terrorists to infiltrate

பயங்கரவாதிகள் பயன்படுத்திய சுரங்கப்பாதையை கண்டுபிடிக்க பாகிஸ்தானுக்குள் 200 மீட்டர் தூரம் சென்ற இந்திய பாதுகாப்பு படையினர்

பயங்கரவாதிகள் பயன்படுத்திய சுரங்கப்பாதையை கண்டுபிடிக்க பாகிஸ்தானுக்குள் 200 மீட்டர் தூரம் சென்ற இந்திய பாதுகாப்பு படையினர்
பயங்கரவாதிகள் ஊடுருவ பயன்படுத்திய சுரங்கப்பாதையை கண்டுபிடிக்க இந்திய பாதுகாப்பு படையினர் பாகிஸ்தானுக்குள் 200 மீட்டர் தூரம் சென்றனர்
புதுடெல்லி

நவம்பர் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் சம்பா துறையில் உள்ள சர்வதேச எல்லைக்கு அருகே பயங்கரவாதிகள் ஊடுருவலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 150 மீட்டர் நீளமுள்ள நிலத்தடி சுரங்கப்பாதையை இந்திய பாதுகாப்பு படையினர் கண்டு பிடித்தனர்.எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எஃப்) மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீசார் இணைந்து நடத்திய நடவடிக்கையில் இந்த சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்திய பாதுகாப்புப் படையினர் பாகிஸ்தானின் பகுதிக்குள் கிட்டத்தட்ட 200 மீட்டர் தூரம் சென்று சுரங்கப்பாதையை கண்டுபிடித்தனர். இது பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ பயன்படுத்தப்பட்டதாக அரசாங்க உயர் அதிகாரி தெரிவித்தார்.

நவம்பர் 19 அன்று, ஜம்மு-காஷ்மீரில் நடந்த நக்ரோட்டா என்கவுண்டரில் பாதுகாப்புப் படையினர் நான்கு பயங்கரவாதிகளை சுட்டு கொன்றனர்.பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் வைத்திருந்த மொபைல் தொலைபேசியை  கைப்பற்றி அதை ஆய்வு செய்தது  சுரங்கப்பாதையை கண்டுபிடிக்க பாதுகாப்பு படைகளுக்கு அது உதவியது.

எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எஃப்) டி.ஜி.ரகேஷ் அஸ்தானா இது குறித்து பேசும் போது பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட மொபைல் போன்களின் பகுப்பாய்வின் அடிப்படையில், நவம்பர் 22 அன்று, பாதுகாப்ப்ய் படி பயங்கரவாதிகள் பயன்படுத்திய சுரங்கப்பாதையை கண்டுபிடித்தது என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்து கோவில் இடிப்பு : ஐ.நா. தீர்மானத்தின் பின்னால் பாகிஸ்தான் மறைந்து கொள்ள முடியாது -இந்தியா கண்டனம்
இந்து கோவில் இடிப்பு : ஐ.நா. தீர்மானத்தின் பின்னால் பாகிஸ்தான் மறைந்து கொள்ள முடியாது என்று இந்தியா கூறி உள்ளது
2. பயங்கரவாதிகள் ஊடுருவ வசதியாக 150 மீட்டர் நீள சுரங்கப்பாதை; எல்லை பாதுகாப்பு படை கண்டுபிடித்தது
காஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவுவதற்காக சர்வதேச எல்லையில் கட்டப்பட்ட 150 மீட்டர் நீள சுரங்கப்பாதையை எல்லை பாதுகாப்பு படை கண்டுபிடித்தது.
3. ராஜஸ்தானில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தவர் கைது
ராஜஸ்தானில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தவர் கைது செய்யப்பட்டார்.
4. பாகிஸ்தான் சிறையில் 319 இந்தியர்கள்; இந்தியாவிடம் பட்டியல் ஒப்படைப்பு
பாகிஸ்தான் சிறையில் வாடும் 319 இந்தியர்கள் பற்றிய பட்டியலை, அந்த நாடு இந்தியாவிடம் ஒப்படைத்தது.
5. பாகிஸ்தானில் இந்து கோவிலை இடித்து தள்ளியதற்காக 30 பேர் கைது
பாகிஸ்தானில் இந்து கோவிலை இடித்து தள்ளிய சம்பவத்தில் தொடர்புடைய 30 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.