விவசாயிகளுக்கு ஆதரவாக போராட சென்ற ஷாகின்பாக் போராளி பில்கிஸ் தாதி தடுத்து நிறுத்தம்


விவசாயிகளுக்கு ஆதரவாக போராட சென்ற ஷாகின்பாக் போராளி பில்கிஸ் தாதி தடுத்து நிறுத்தம்
x
தினத்தந்தி 2 Dec 2020 12:30 AM IST (Updated: 2 Dec 2020 12:30 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளுக்கு ஆதரவாக போராட சென்ற ஷாகின்பாக் போராளி பில்கிஸ் தாதியை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

புதுடெல்லி, 

டெல்லியில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக ஷாகின்பாக்கில் போராட்டம் தீவிரம் அடைந்தபோது அதில் முக்கிய அங்கம் வகித்தவர் பில்கிஸ் தாதி. 82 வயதான அவர், கடும் குளிரை பொருட்படுத்தாது போராட்ட கூடாரத்தில் நாட்களை கழித்தார். போராட்டத்தால் புகழ்பெற்ற அவர், டைம் இதழில் புகழ்பெற்ற 100 மனிதர்கள் பட்டியலிலும் இடம்பெற்றார்.

முதியவரான அவர், வேளாண்மை சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் நடத்திவரும் முற்றுகை போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவித்திருந்தார். டெல்லி-அரியானா எல்லையில் சிங்கு பகுதிக்கு சென்று போராட்டத்தில் பங்கெடுக்கவும் முடிவு செய்தார். இதற்காக கிளம்பி சென்ற பில்கிஸ் தாதியை சிங்கு எல்லையில் நேற்று போலீசார் தடுத்து நிறுத்தினர்.

“மூத்த குடிமகனான அவர், தற்போதைய கோவிட் சூழல் காரணமாக சொந்த பாதுகாப்பு கருதி தடுத்து நிறுத்தி திரும்பி செல்லுமாறு கேட்டுக் கொண்டோம்” என்று போலீசார் கூறினர். பில்கிஸ்தாதி அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று விடப்பட்டார்.


Next Story