30 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இந்திய அரிசியை இறக்குமதி செய்யத் தொடங்கும் சீனா


30 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இந்திய அரிசியை இறக்குமதி செய்யத் தொடங்கும் சீனா
x
தினத்தந்தி 2 Dec 2020 10:40 AM GMT (Updated: 2 Dec 2020 10:40 AM GMT)

தள்ளுபடி விலையை இந்தியாவில் வழங்குவதால் சீனா 30 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இந்திய அரிசியை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது என இந்திய தொழில்துறை அதிகாரிகள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்து உள்ளனர்.

புதுடெல்லி

உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளராக இந்தியாவும், சீனா மிகப்பெரிய இறக்குமதியாளராகவும் உள்ளன. சீனா  ஆண்டு தோறும் சுமார்  4 கோடி  டன் அரிசியை இறக்குமதி செய்கிறது, ஆனால் தரத்தை  காரணம் காட்டி இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதை  தவிர்த்து வந்தது .

30 ஆண்டுகளுக்கு  பிறகு முதன்முறையாக சீனா அரிசி கொள்முதல் செய்துள்ளது. இந்திய அரிசியின் தரத்தைப் பார்த்தபின் அவை அடுத்த ஆண்டு இறக்குமதியை அதிகரிக்கக்கூடும் என்று நெல் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.வி.கிருஷ்ண ராவ் கூறி உள்ளார்.

இந்திய வர்த்தகர்கள் டிசம்பர்-பிப்ரவரி  வரை ஒரு டன்னுக்கு 300 டாலர் மதிப்பில்  100,000 டன் உடைந்த அரிசியை  ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளதாக தொழில்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சீனாவின் பாரம்பரிய சப்ளையர்களான தாய்லாந்து, வியட்நாம், மியான்மர் மற்றும் பாகிஸ்தான் ஆகியவை  ஏற்றுமதி குறைக்கப்படும்  அவைகள் உபரி விநியோகங்களைக் கொண்டுள்ளன.  மேலும் இந்திய விலைகளுடன் ஒப்பிடும்போது ஒரு டன்னுக்கு குறைந்தது  30 டாலர்கள் அதிகம் இருப்பதாக  இந்திய அரிசி வர்த்தக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எல்லை பகுதியில்  இரு நாடுகளுக்கும் இடையே  பதற்றங்கள் அதிகரித்து வரும் இந்த  நேரத்தில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.

Next Story