புரெவி புயல்: ஆழ்கடலில் சிக்கி தவிக்கும் 50 படகுகள் ; தேடுதல் வேட்டை தீவிரம்
கேரள மாநிலம் கொல்லத்தின் நீந்தகரா அருகே ஆழ்கடலில் 50 க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் சிக்கித் தவிப்பதாக கூறப்படுகிறது.
கொல்லம்
புதுச்சேரி அருகே நவம்பர் 26 ஆம் தேதி நிவர் புயலுக்கு பிறகு, இந்திய வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை புரெவி புதிய பயல் குறித்து எச்சரிக்கையை வெளியிட்டது.
தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு புயலாக வலுவடைந்தது. இதற்கு புரெவி என்று பெயரிடப்பட்டுள்ளது. இது இன்று பாம்பனுக்கு கிழக்கு-தென் கிழக்கே சுமார் 420 கி.மீ. தொலைவிலும், கன்னியாகுமரிக்கு கிழக்கு-வடகிழக்கே சுமார் 600 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் இலங்கையை கடந்து நாளை காலை மன்னார் வளைகுடா வழியாக குமரிக்கடல் பகுதிக்கு நகரக் கூடும். இது தெற்கு தமிழ்நாடு மற்றும் கேரளாவின் கடற்கரைகளை தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கொல்லத்தின் நீந்தகரா அருகே ஆழ்கடலில் 50 க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் சிக்கித் தவிப்பதாக கூறப்படுகிறது. படகுகளில் உள்ள மீனவர்களின் உறவினர்கள் தொலைபேசி மூலம் அவர்களை அணுக முடியவில்லை என்று தகவல் கிடைத்துள்ளது.
சிக்கித் தவிக்கும் படகுகளைக் கண்டுபிடிக்க கடலோர காவல்படை தேடும் முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில், தமிழ்நாட்டிலிருந்து சென்ற ஒரு சில படகுகள் நீந்தகர கரையில் இறங்கியுள்ளன.
புதிய புயல் காரணமாக நவம்பர் 30 முதல் டிசம்பர் 4 வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னர் எச்சரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிட தக்கது
Related Tags :
Next Story