டெல்லியில் விவசாயிகளுடன் இன்று பேச்சுவார்த்தை: வேளாண் மந்திரியுடன் அமித்ஷா ஆலோசனை + "||" + Narendra Singh Tomar, Piyush Goel hold talks with Amit Shah day after farmers say no to new panel
டெல்லியில் விவசாயிகளுடன் இன்று பேச்சுவார்த்தை: வேளாண் மந்திரியுடன் அமித்ஷா ஆலோசனை
டெல்லியில் விவசாயிகளுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக, வேளாண் மந்திரியுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி,
மத்திய அரசு 3 கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லியில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று 7 வது நாளாக போராட்டம் நீடித்தது.
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர், ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல், வர்த்தக இணை மந்திரி சோம் பர்காஷ் ஆகியோர் மத்திய அரசின் பிரதிநிதிகளாக பங்கேற்றனர்.
இதில் 35-க்கு மேற்பட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. எனவே இன்று (வியாழக்கிழமை) 2-ம் சுற்று பேச்சுவார்த்தை நடக்கிறது.
இதை முன்னிட்டு நேற்று மத்திய அரசு பிரதிநிதிகளான நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல் ஆகியோருடன், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை நடத்தினார். இதில் வேளாண் சட்டங்கள் தொடர்பான விவசாயிகளின் கவலைகள், அதற்கு மத்திய அரசு அளிக்க வேண்டிய பதில் போன்றவை குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது.