மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி தாதா தாவூத் இப்ராகிமின் சொத்துகள் ரூ.1.10 கோடிக்கு ஏலம்
மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி தாதா தாவூத் இப்ராகிமின் மூன்று சொத்துகள் ரூ.1.10 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது.
மும்பை,
மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அவரது சொத்துகளை மராட்டிய அரசு ஏலத்தில் விட்டு வருகிறது. கடந்த மாதம் தாவூத் இப்ராகிமுக்கு சொந்தமான 6 சொத்துகள் ஏலமிடப்பட்டது. அப்போது தொழில் நுட்ப கோளாறு காரணமாக அவரது 3 சொத்துகளை ஏலத்தில் விட முடியவில்லை.
இந்த நிலையில் அந்த 3 சொத்துகளுக்கான ஏலம் நேற்று நடந்தது. ரத்னகிரி மாவட்டம் லோதே கிராமத்தில் உள்ள 30 ஆயிரம் சதுர அடி, மற்றும் 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட இரு நிலங்கள் மற்றும் ஒரு கட்டிடம் ஆகியவை விற்பனை செய்யப்பட்டது. 3 சொத்துகளையும் கேத் பகுதியை சேர்ந்த ரவீந்திர கதே என்பவர் ரூ.1 கோடியே 10 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தார்.
அதே வேளையில் தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளியான மறைந்த தாதா இக்பால் மிர்சியின் சொத்துகளை ஏலத்தில் எடுக்க யாரும் முன்வரவில்லை.
Related Tags :
Next Story