ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரப்பட்ட லாட்டரி, சூதாட்டம்: சுப்ரீம் கோர்ட்டு ஆதரவு
லாட்டரி, சூதாட்டத்தை ஜி.எஸ்.டி. வரம்பில் கொண்டு வந்ததற்கு சுப்ரீம் கோர்ட்டு ஆதரவு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
அரியானாவை சேர்ந்த தனியார் லாட்டரி நிறுவனம் ஜி.எஸ்.டி. சட்டத்தின்கீழ் லாட்டரி மற்றும் சூதாட்டத்தை கொண்டு வந்ததற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு இந்த மனுவை விசாரித்து வந்தது. இதில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
“லாட்டரி மற்றும் சூதாட்டத்தை ஜி.எஸ்.டி. வரம்பின் கீழ் கொண்டு வந்த சட்டப்பிரிவுகள் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் இல்லை. ஜி.எஸ்.டி. வரிகள் தொடர்பாக சட்டத்தை உருவாக்க நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் உண்டு. லாட்டரி மற்றும் சூதாட்டத்தின் மூலம் பெறும் பணத்தை ஜி.எஸ்.டி. வரி சட்டத்தின் வரம்பின் கீழ் கொண்டு வந்தது சரியே” என்று அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story