எல்லோருக்கும் தடுப்பூசி; பிரதமர் மோடியின் நிலைப்பாடு என்ன? - ராகுல்காந்தி கேள்வி


எல்லோருக்கும் தடுப்பூசி; பிரதமர் மோடியின் நிலைப்பாடு என்ன? - ராகுல்காந்தி கேள்வி
x
தினத்தந்தி 4 Dec 2020 4:28 AM IST (Updated: 4 Dec 2020 4:28 AM IST)
t-max-icont-min-icon

எல்லோருக்கும் தடுப்பூசி குறித்து பிரதமர் மோடியின் நிலைப்பாடு என்ன என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுடெல்லி, 

எல்லோருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு எப்போதும் சொன்னது இல்லை என்று மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறியிருந்தார்.

இதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஒவ்வொருவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்று பிரதமர் கூறினார். பீகார் சட்டசபை தேர்தலின்போது, பீகாரில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று பா.ஜனதா வாக்குறுதி அளித்தது.

ஆனால், இப்போது மத்திய அரசு, எல்லோருக்கும் தடுப்பூசி வழங்குவதாக சொல்லவில்லை என்று கூறுகிறது. இதில் பிரதமர் மோடியின் நிலைப்பாடு என்ன?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story