விஜய் மல்லையாவுக்கு சொந்தமான பிரான்சில் உள்ள சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை நடவடிக்கை
பிரான்சில் உள்ள விஜய் மல்லையாவின் 14 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
புதுடெல்லி,
பொதுத்துறை வங்கிகளில் கடன் ஏய்ப்பு செய்தது தொடர்பான புகாரில் சிக்கிய தொழிலதிபர் விஜய் மல்லையா, தற்போது பிரிட்டனில் வசித்து வருகிறார். இவர் மீதான விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே தொழிலதிபர் விஜய் மல்லையா மீது மத்திய அமலாக்கத்துறை பண மோசடி வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது.
இந்த நிலையில் தற்போது விஜய் மல்லையாவின் சொத்துக்களை முடக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி விஜய் மல்லையாவின் 1.6 மில்லியன் யூரோ மதிப்புள்ள (இந்திய மதிப்பில் 14.34 கோடி) சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. கடன் ஏய்ப்பு விவகாரத்தில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story