புரெவி புயலின் தாக்கத்தால் கேரளாவில் பரவலான மழை


புரெவி புயலின் தாக்கத்தால் கேரளாவில் பரவலான மழை
x
தினத்தந்தி 5 Dec 2020 3:58 PM GMT (Updated: 5 Dec 2020 3:58 PM GMT)

புரெவி புயலின் தாக்கத்தால் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

திருவனந்தபுரம்,

தமிழகத்தில் கரையைக் கடந்த புரெவி புயலின் தாக்கத்தால் கேரளாவிலும் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. இதனை தொடர்ந்து கேரளா முழுவதும் புயல் தடுப்பு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தாழ்வான பகுதிகளில் இருந்தவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். தேசிய பேரிடர் மீட்பு படையினரும் வர வழைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தனர்.

இந்நிலையில் புரெவி புயல் கரையை கடந்த போது கேரளா முழுவதும் பரவலாக மழை பெய்தது. மேலும் புயலின் தாக்கம் காரணமாக கேரளா முழுவதும் அடுத்த ஒருவாரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

மழை ஆபத்து நீங்கியதை அடுத்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்கள் இன்று வீடு திரும்பலாம் என அரசு அறிவித்து உள்ளது. அதே நேரம் தாழ்வான பகுதிகளில் குடியிருப் போர் பாதுகாப்புடன் இருக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

Next Story