அம்பேத்கர் நினைவு தினம்: கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா மலர்த்தூவி மரியாதை
அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
பெங்களூரு,
சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 64வது ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலும் அவரது திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அம்பேத்கரின் 64-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பெங்களூரு விதான் சவுதாவில் உள்ள அம்பேத்கரின் திரு உருவ சிலைக்கு கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
Related Tags :
Next Story