ஆந்திராவில் மர்ம நோய்: 200-க்கும் மேற்பட்டோருக்கு உடல் நலம் பாதிப்பு


ஆந்திராவில் மர்ம நோய்: 200-க்கும் மேற்பட்டோருக்கு உடல் நலம் பாதிப்பு
x
தினத்தந்தி 6 Dec 2020 7:21 PM IST (Updated: 6 Dec 2020 7:21 PM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள எலுரு என்ற நகரின் பல இடங்களில் வசித்த 228 பேர் மர்ம நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜயவாடா,

ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள எலுரு என்ற நகரின் பல இடங்களில் வசித்த 228 பேர் மர்ம நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைவருக்கும் மயக்கம், தலைசுற்றல், வாந்தி, நடுக்கம், கீழே விழுதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் அல்ல எனவும், பொதுவான எந்தவொரு நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை எனவும் டாக்டர்கள் தெரிவித்தனர். முதியவர்களும், குழந்தைகளும் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் ஏராளமானோர் வீடு திரும்பிய நிலையில், 76 பெண்கள் மற்றும் 46 குழந்தைகள் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6-வயது சிறுமியின் உடல் நிலை மோசம் அடைந்தது. இதையடுத்து, விஜயவாடா மருத்துவமனைக்கு சிறுமி மாற்றப்பட்டுள்ளாள்.

மருத்து நிபுணர் குழுவினர் எலுருவில் முகாமிட்டுள்ளனர். உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதில் எந்த பிரச்சினையும் கண்டறியப்படவில்லை என்று மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது.  

பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஆந்திர சுகாதாரத்துறை மந்திரி அல நானி, உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள யாருக்கும் கொரோனோ தொற்று இல்லை.மக்கள் அச்சப்பட தேவையில்லை. உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி இந்த விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தி நிலையை கண்காணித்து வருகிறார்” என்றார்.


Next Story