அசாமில் 101 கிலோ போதை பொருள் பறிமுதல்; 3 பேர் கைது


அசாமில் 101 கிலோ போதை பொருள் பறிமுதல்; 3 பேர் கைது
x
தினத்தந்தி 7 Dec 2020 1:17 AM IST (Updated: 7 Dec 2020 1:17 AM IST)
t-max-icont-min-icon

அசாமில் 101 கிலோ எடை கொண்ட போதை பொருளை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கவுகாத்தி,

அசாம் மாநிலத்தின் சோனாரி காவன் பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையிலான 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.  இதில் அவர்கள் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

அவர்களிடம் இருந்து 2.076 கிலோ எடை கொண்ட ஹெராயின் என்ற போதை பொருளை கைப்பற்றி உள்ளனர்.  இதேபோன்று, 101.48 கிலோ எடையுள்ள கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.  அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story