வளர்ச்சிக்கு சீர்திருத்தங்கள் அவசியம்: பிரதமர் மோடி


வளர்ச்சிக்கு சீர்திருத்தங்கள் அவசியம்: பிரதமர்  மோடி
x
தினத்தந்தி 7 Dec 2020 5:12 PM IST (Updated: 7 Dec 2020 5:12 PM IST)
t-max-icont-min-icon

கடந்த நூற்றாண்டுகளில் உள்ள சட்டங்களை கொண்டு வரும் நூற்றாண்டுக்கான இந்தியாவை கட்டமைக்க முடியாது என்று பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி,

உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில் முதல் கட்டமாக சிகந்திரா-தாஜ் கிழக்கு நுழைவாயில் இடையே மெட்ரோ ரயில் திட்டம் ரூ.8,379.62 கோடி செலவில் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்திற்கு கடந்த ஆண்டு மே மாதம் பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினாா்.

அதற்கான கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது ஆக்ரா மெட்ரோ ரயில் திட்டத்துக்கான கட்டுமானப் பணிகளை பிரதமா் மோடி காணொலிக் காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:- கடந்த நூற்றாண்டுகளில் உள்ள சட்டங்களை கொண்டு வரும் நூற்றாண்டுக்கான இந்தியாவை கட்டமைக்க முடியாது.

 புதிய வசதிகள் மற்றும் அமைப்புக்கு சீர்திருத்தங்கள் அவசியமானவை.  கடந்த நூற்றாண்டில் பழைய சட்டங்கள் பயன்அளித்திருக்கும். ஆனால், அடுத்த நூற்றாண்டில் இந்த சட்டங்கள் சுமையாக மாறிவிடும். இந்தக் காரணத்தால்தான், தொடர்ந்து சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன” என்றார். 


Next Story