பைசர், கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி மதிப்பாய்வு பணிகளை இந்தியா விரைவுபடுத்துகிறது: அரசு அதிகாரி
அவசரகால பயன்பாட்டிற்காக பைசர் இன்க் மற்றும் அஸ்ட்ராஜெனெகா உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் மதிப்பாய்வு பணிகளை இந்தியா விரைவுபடுத்துகிறது என்று அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
130 கோடிக்கும் அதிகமான மக்களைக் கொண்ட உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 96.77 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,40,573 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு மருந்தின் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்குமாறு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரல் (டி.சி.ஜி.ஐ) அமைப்பிடம், இந்தியாவின் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோவிஷீல்ட் தடுப்பு மருந்தை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன.சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா தான் கொரோனா தடுப்பு மருந்தின் அவசர பயன்பாட்டுக்கு விண்ணப்பித்து இருக்கும் முதல் இந்திய மருந்து நிறுவனம் ஆகும்.
இங்கிலாந்தின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் கூட்டாக தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி அவசர கால பயன்பாட்டுக்கு இங்கிலாந்து, பக்ரைன் ஆகிய நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன. இந்தநிலையில் இந்தியாவிலும் அவசர கால பயன்பாட்டுக்கான ஒப்புதலை பைசர் நிறுவனம் நாடி உள்ளதாகவும், இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளருக்கு கடந்த 4-ந் தேதி விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அவசரகால பயன்பாட்டிற்காக பைசர் இன்க் மற்றும் அஸ்ட்ராஜெனெகா உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை இந்தியா விரைவுபடுத்துகிறது என்று அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறும் போது
நாங்கள் மறுஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளோம்., இது ஒரு விரைவான மறுஆய்வு செயல்முறையாகும், இது காலத்தின் தேவை. நாங்கள் விரைவில் மதிப்பாய்வு செய்ய வேண்டும் என கூறி உள்ளார்.
Related Tags :
Next Story