தொழில்நுட்ப புரட்சியுடன் வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்துவது என சிந்தித்து திட்டமிட வேண்டியது அவசியம் - பிரதமர் மோடி
3 ஆண்டுகளில் ஒவ்வொரு இந்திய கிராமத்திலும் அதிவேக பைபர் ஆப்டிக் தரவு இண்டர்நெட் வசதி இருக்கும் என இந்தியா மொபைல் மாநாடு 2020 ல் பிரதமர் மோடி பேசினார்.
புதுடெல்லி
இந்தியா மொபைல் மொபைல் சேவை சங்கம் (ஐ.எம்.சி) ஏற்பாடு செய்த , 4- வது இந்தியா மொபைல் மாநாடு 2020 தொடக்க விழாவில் இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:-
வரவிருக்கும் தொழில்நுட்ப புரட்சியின் மூலம் வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பதை சிந்தித்து திட்டமிட வேண்டியது அவசியம். சிறந்த சுகாதாரம், சிறந்த கல்வி, சிறந்த தகவல் தொடர்பு மற்றும் நமது விவசாயிகளுக்கான வாய்ப்புகள், சிறு வணிகங்களுக்கான சிறந்த சந்தை அணுகல் ஆகியவை நாம் நோக்கிச் செல்லக்கூடிய சில குறிக்கோள்கள் ஆகும்.
தொற்றுநோயையும் மீறி உலகம் செயல்பட்டது உங்கள் கண்டுபிடிப்பு மற்றும் முயற்சிகள் காரணமாகும். ஒரு மகன் தனது தாயுடன் வேறு நகரத்தில் தொடர்பிலிருப்பது உங்கள் முயற்சியால் தான், ஒரு மாணவர் வகுப்பறையில் இல்லாமல் தனது ஆசிரியரிடமிருந்து கற்றுக்கொண்டார், ஒரு நோயாளி தனது வீட்டிலிருந்து தனது மருத்துவரை அணுகினார் இதற்கெல்லம் காரணம் மொபைல் தான்.
மொபைல் உற்பத்தியில் நாம் அதிக வெற்றியைப் பெற்றுள்ளோம், மொபைல் உற்பத்திக்கான விருப்பமான இடங்களில் ஒன்றாக இந்தியா உருவாகி வருகிறது.
கொரோனா தடுப்பூசி விரைவில் கிடைக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில், தொற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசிக்கு மொபைல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். மொபைல் தொழில்நுட்பம் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள நன்மைகளை அளித்துள்ளது. தொற்றுநோய்களின் போது ஏழைகளுக்கும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கும் உதவியது.
எதிர்காலத்தில் லட்சக்கணக்கான இந்தியர்களை மேம்படுத்துவதற்கும் 5 ஜி தொழிநுட்பத்தை சரியான நேரத்தில் கொண்டு வருவதை உறுதி செய்ய நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக, மொபைல்களை அடிக்கடி மாற்றும் கலாச்சாரம் நம்மிடம் உள்ளது. எலக்ட்ரானிக் கழிவுகளை கையாளுவதற்கான ஒரு சிறந்த வழியைப் பற்றி சிந்திக்கவும், பொருளாதாரத்தை உருவாக்கவும் ஒரு பணிக்குழுவை உருவாக்க வேண்டும்.
தொலைதொடர்பு உபகரணங்கள், வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் உற்பத்தி ஆகியவற்றிற்கான இந்தியாவை உலகளாவிய மையமாக மாற்ற நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம்.
வரவிருக்கும் தொழில்நுட்ப புரட்சியுடன் வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்த வேண்டும் என்பதை சிந்தித்து திட்டமிட வேண்டியது அவசியம் என கூறினார்.
Related Tags :
Next Story