தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக மெகபூபா முப்தி குற்றச்சாட்டு
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி, தான் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி தான் மீண்டும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மெகபூபா முப்தி, பட்காம் மாவட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட குடும்பத்தினரை சந்திக்க விரும்புகிறேன்.
ஆனால், எனது வீட்டிற்கு வெளியே ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள காவல் துறை மற்றும் பாதுகாப்பு படையினரால் நான் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளேன். அரசின் மீதான எதிர்ப்புகளைத் தடுக்க தடுப்புக்காவல் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது ” என்றார்.
ஜம்மு காஷ்மீரின் முதல்வராக செயல்பட்டவர் மெகபூபா முப்தி. மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை உறுதி செய்யும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியதைத் தொடர்ந்து ஜம்முகாஷ்மீரின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை வீட்டுச் சிறையில் அடைத்தது. பல தலைவர்களும் ஓராண்டுக்குப் பின் விடுதலை செய்யப்பட்ட நிலையில் மெகபூபா 14 மாதங்களுக்குப் பிறகு கடந்த அக்டோபர் 14ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.
Related Tags :
Next Story