போராடும் விவசாயிகள் முட்டாள்களா? மத்திய அரசு மீது கமல்நாத் பாய்ச்சல்
தற்போது உள்ள விவசாயிகளுக்கு அனைத்து தகவல்களும் தெரிந்து உள்ளது என்று கமல்நாத் கூறினார்.
புதுடெல்லி,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த 12 தினங்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு இதுவரை 5 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியது.
அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து, நாளை 6-வது கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. விவசாய சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கும் விவசாயிகள் அழைப்பு விடுத்தனர். அதன்படி, இன்று முழு அடைப்பு போராட்டமும் நடைபெற்றது.
இந்நிலையில் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துப் பேசிய மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் மத்திய அரசைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். வேளாண் சட்டங்களால் விவசாயிகள் இன்னல்களில் உள்ளதாகத் தெரிவித்த கமல்நாத், "போராடும் விவசாயிகள் முட்டாள்களா?" எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், 30 வருடங்களுக்கு முன்பிருந்த விவசாயிகளுக்கும் தற்போது உள்ள விவசாயிகளுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. தற்போது உள்ள விவசாயிகளுக்கு அனைத்து தகவல்களும் தெரிந்து உள்ளது” என்றார்.
Related Tags :
Next Story