2021 தேர்தலில் மம்தா பானர்ஜியின் ஆட்சியை அகற்றி பாஜக ஆட்சியமைக்கும் - ஜெ.பி. நட்டா


2021 தேர்தலில் மம்தா பானர்ஜியின் ஆட்சியை அகற்றி பாஜக ஆட்சியமைக்கும் - ஜெ.பி. நட்டா
x
தினத்தந்தி 9 Dec 2020 11:55 PM IST (Updated: 9 Dec 2020 11:55 PM IST)
t-max-icont-min-icon

2021 தேர்தலில் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் ஆட்சியை அகற்றி பாஜக ஆட்சியமைக்கும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்கத்தில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று மம்தா பானர்ஜியின் ஆட்சியை அகற்றி பாஜக ஆட்சியமைக்கும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

ஜெ.பி. நட்டா 2 நாள் பயணமாக மேற்கு வங்கம் சென்றுள்ளார். அங்கு காணொலி வாயிலாக 8 கட்சி அலுவலகங்கள் மற்றும் தேர்தல் மேலாண்மை அறையைத் திறந்துவைத்தார்.

இந்தநிலையில். ஹாஸ்டிங்க்ஸ் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் மத்தியில் அவர் பேசியதாவது:-

2021 தேர்தலில் தாமரை மலரும். மம்தா பானர்ஜியின் அரசை அகற்றுவோம். பாஜக, அலுவலகத்திலிருந்து கட்சியை நடத்தி வரும் நிலையில், மற்ற கட்சிகள் அவர்களது வீட்டிலிருந்து நடத்தப்படுகிறது என்றார். 

மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நிலையில், 2 நாள் பயணத்தில் தேர்தலுக்கான தயார் நிலை குறித்து நட்டா ஆய்வு செய்ய உள்ளார்.

Next Story